துறவுடைமை

திருக்குறள் மணக்குடவருரை

அடல்வேண்டும் ஐந்தின் புலத்தை; விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை; உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து.

மற்றும் தொடர்ப்பா டெவன்கொல், பிறப்பறுக்கல்உற்றார்க் குடம்பு மிகை.

பற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்; மற்றுநிலையாமை காணப் படும்.

வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின்ஈண்டியற் பால பல.

தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்.

யானென தென்னும் செருக்கறுப்பான்; வானோர்க்குயர்ந்த உலகம் புகும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு.

Comments

Loading comments…