புலான்மறுத்தல்

திருக்குறள் மணக்குடவருரை

உண்ணாமை வேண்டும் புலாலைப் பிறிதொன்றின்புண்ண துணர்வார்ப் பெறின்.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை; அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்?

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றின்உடல்சுவை உண்டார் மனம்.

தினற்பொருட்டால் கொள்ளா துலகெனின், யாரும்விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

அருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்;பொருளல்ல தவ்வூன் தினல்.

செயிரிற் றலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரிற் றலைப்பிரிந்த ஊன்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றின்உயிர்செகுத் துண்ணாமை நன்று.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்.

உண்ணாமை யுள்ள துயிர்நிலை; ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யா தளறு.

Comments

Loading comments…