பொறையுடைமை
திருக்குறள் மணக்குடவருரை
பொறுத்தல் இறப்பினை என்றும், அதனைமறத்தல் அதனினும் நன்று.
திறனல்ல தற்பிறர் செய்யினும், நோநொந்தறனல்ல செய்யாமை நன்று.
நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமைபோற்றி ஒழுகப் படும்.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்தகுதியான் வென்று விடல்,
இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை,
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து,
ஒறுத்தார்க் கொருநாளே இன்பம்; பொறுத்தார்க்குப்பொன்றும் தனையும் புகழ்.
உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
துறந்தாரின் தூய்மை யுடையார், இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்,
Comments
Loading comments…