மக்கட்பேறு
திருக்குறள் மணக்குடவருரை
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவுடையமக்கட்பே றல்ல பிற.
எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின்.
தம்பொருள் என்பதம் மக்கள், அவர்பொருள்தம்தம் வினையான் வரும்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் : மற்றவர்சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொற் கேளா தவர்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்துமன்னுயிர்க் கெல்லாம் இனிது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும், தன்மகனைச்சான்றோன் எனக்கேட்ட தாய்,
தந்தை மகற்காற்றும் நன்றி, அவையத்துமுந்தி இருப்பச் செயல்,
மகன்தந்தைக் காற்றும் உதவி, இவன் தந்தைஎன்னோற்றான் கொல்என்னும் சொல்,
Comments
Loading comments…