மெய்யுணர்தல்
திருக்குறள் மணக்குடவருரை
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவற்கு.
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும், அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்செம்பொருள் காண்ப தறிவு.
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
ஐயத்தின் நீங்கித் துணிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து.
இருணீங்கி இன்பம் பயக்கும், மருணீங்கிமாசறு காட்சி யவர்க்கு.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார், தலைப்படுவர்மற்றீண்டு வாரா தெறி.
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின், மற்றழித்துச்சார்தரா சார்தரும் நோய்.
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றின்நாமம் கெடக்கெடும் நோய்.
Comments
Loading comments…