வாய்மையுடைமை

திருக்குறள் மணக்குடவருரை

தன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின்தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.

பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்,

உள்ளத்தால் பொய்யா தொழுகின், உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.

மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடுதானம் செய்வாரில் தலை.

பொய்யாமை அன்ன புகழில்லை, பொய்யாமைஎல்லா அறமும் தரும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று,

புறம்தூய்மை நீரால் அமையும்; அகம்தூய்மைவாய்மையால் காணப் படும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு,

Comments

Loading comments…