அன்பு உடைமை

திருக்குறள், மூலம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்புன்கணீர் பூசல் தரும். ⁠71

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு. ⁠71

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போடு இயைந்த தொடர்பு. ⁠73

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு. ⁠74

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு. ⁠75

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை. ⁠76

என்பி லதனை வெயில்போலக் காயுமேஅன்பி லதனை அறம். ⁠77

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்வற்றல் மரந்தளிர்த் தற்று. ⁠78

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கைஅகத்துறுப்பு அன்பி லவர்க்கு. ⁠79

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு. ⁠80

Comments

Loading comments…