அரண்

திருக்குறள், மூலம்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள். ⁠741

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண். ⁠742

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல். ⁠743

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண். ⁠744

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீரது அரண். ⁠745

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண். ⁠746

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரியது அரண். ⁠747

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வது அரண். ⁠748

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண். ⁠749

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண். ⁠750

Comments

Loading comments…