அருள் உடைமை

திருக்குறள், மூலம்

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள. ⁠241

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை. ⁠242

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். ⁠243

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்பதன்னுயிர் அஞ்சும் வினை. ⁠244

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்மல்லன்மா ஞாலங் கரி. ⁠245

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார். ⁠246

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. ⁠247

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது. ⁠248

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம். ⁠249

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேல் செல்லும் இடத்து. ⁠250

Comments

Loading comments…