அறன் வலியுறுத்தல்

திருக்குறள், மூலம்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு. ⁠31

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு. ⁠32

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல். ⁠33

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்ஆகுல நீர பிற. ⁠34

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம். ⁠35

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. ⁠36

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. ⁠37

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல். ⁠38

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்புறத்த புகழும் இல. ⁠39

செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி. ⁠40

Comments

Loading comments…