அலர் அறிவுறுத்தல்

திருக்குறள், மூலம்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால். ⁠1141

மலரன்ன கண்ணாள் அருமை அறியாதுஅலரெமக்கு ஈந்ததிவ் வூர். ⁠1142

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்பெறாஅது பெற்றன்ன நீர்த்து. ⁠1143

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து. ⁠1144

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்வெளிப்படுந் தோறும் இனிது. ⁠1145

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று. ⁠1146

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்நீராக நீளும்இந் நோய். ⁠1147

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்காமம் நுதுப்பேம் எனல். ⁠1148

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்பலர்நாண நீத்தக் கடை. ⁠1149

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்கெளவை எடுக்கும்இவ் வூர். ⁠1150

Comments

Loading comments…