அழுக்காறாமை

திருக்குறள், மூலம்

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்துஅழுக்காறு இலாத இயல்பு. ⁠161

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின். ⁠162

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணாது அழுக்கறுப் பான். ⁠163

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக்கு அறிந்து. ⁠164

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்வழுக்கியும் கேடீன் பது. ⁠165

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும். ⁠166

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். ⁠167

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும். ⁠168

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். ⁠169

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். ⁠170

Comments

Loading comments…