அவா அறுத்தல்

திருக்குறள், மூலம்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து. ⁠361

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும். ⁠362

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்பது இல். ⁠363

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும். ⁠364

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்அற்றாக அற்றது இலர். ⁠365

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா. ⁠366

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். ⁠367

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும். ⁠368

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். ⁠369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். ⁠370

Comments

Loading comments…