அவை அஞ்சாமை

திருக்குறள், மூலம்

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். ⁠721

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார். ⁠722

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத்து அஞ்சா தவர். ⁠723

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்றமிக்காருள் மிக்க கொளல். ⁠724

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு. ⁠725

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு. ⁠726

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்துஅஞ்சு மவன்கற்ற நூல். ⁠727

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார். ⁠728

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார். ⁠729

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார். ⁠730

Comments

Loading comments…