அவை அறிதல்

திருக்குறள், மூலம்

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர். ⁠711

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர். ⁠712

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல். ⁠713

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணம் கொளல். ⁠714

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு. ⁠715

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. ⁠716

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து. ⁠717

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று. ⁠718

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்குசெலச் சொல்லு வார். ⁠719

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்அல்லார்முன் கோட்டி கொளல். ⁠720

Comments

Loading comments…