ஆள்வினை உடைமை

திருக்குறள், மூலம்

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும். ⁠611

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. ⁠612

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு. ⁠613

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும். ⁠614

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண். ⁠615

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும். ⁠616

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள். ⁠617

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி. ⁠618

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். ⁠619

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர். ⁠620

Comments

Loading comments…