இடன் அறிதல்

திருக்குறள், மூலம்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்அல் லது. ⁠491

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும். ⁠492

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின். ⁠493

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின். ⁠494

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற. ⁠495

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து. ⁠496

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி இடத்தால் செயின். ⁠497

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும். ⁠498

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. ⁠499

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு. ⁠500

Comments

Loading comments…