ஈகை

திருக்குறள், மூலம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து. ⁠221

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று. ⁠222

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள. ⁠223

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணும் அளவு. ⁠224

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின். ⁠225

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி. ⁠226

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது. ⁠227

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர். ⁠228

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல். ⁠229

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை. ⁠230

Comments

Loading comments…