உறுப்பு நலன் அழிதல்

திருக்குறள், மூலம்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண். ⁠1231

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண். ⁠1232

தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள். ⁠1233

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள். ⁠1234

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள். ⁠1235

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்கொடியர் எனக்கூறல் நொந்து. ⁠1236

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்வாடுதோட் பூசல் உரைத்து. ⁠1237

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல். ⁠1238

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண். ⁠1239

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டு. ⁠1240

Comments

Loading comments…