ஊடல் உவகை
திருக்குறள், மூலம்
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர்அளிக்கு மாறு.1321
ஊடலின் தோன்றும் சிறுதுணி நல்லளிவாடினும் பாடு பெறும்.1322
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னா ரகத்து?1323
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை.1324
தவறில ராயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலினாங்கொன்று உடைத்து.1325
உணலினும் உண்டது அறல்இனிது; காமம்புணர்தலின் ஊடல் இனிது.1326
ஊடலில் தோற்றவர் வென்றார்; அதுமுன்னும்கூடிலில் காணப் படும்.1327
ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு?1328
ஊடுக மன்னோ ஒளியிழை; யாம்இரப்பநீடுக மன்னோ இரா.1329
ஊடுதல் காமத்திற்கு இன்பம், அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.1330
Comments
Loading comments…