ஒப்புரவு அறிதல்

திருக்குறள், மூலம்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு. ⁠211

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு. ⁠212

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற. ⁠213

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும். ⁠214

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு. ⁠215

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின். ⁠216

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின். ⁠217

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர். ⁠218

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீரசெய்யாது அமைகலா வாறு. ⁠219

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து. ⁠220

Comments

Loading comments…