ஒழுக்கம் உடைமை

திருக்குறள், மூலம்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். ⁠131

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை. ⁠132

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும். ⁠133

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். ⁠134

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்க மிலான்கண் உயர்வு. ⁠135

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து. ⁠136

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி. ⁠137

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும். ⁠138

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல். ⁠139

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்கல்லார் அறிவிலா தார் ⁠140

Comments

Loading comments…