கனவு நிலை உரைத்தல்

திருக்குறள், மூலம்

காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து. ⁠1211

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன். ⁠1212

நனவினால் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர். ⁠1213

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தரற்கு. ⁠1214

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது. ⁠1215

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்காதலர் நீங்கலர் மன். ⁠1216

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்என்எம்மைப் பீழிப் பது. ⁠1217

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. ⁠1218

நனவினால் நல்காரை நோவர் கனவினால்காதலர்க் காணா தவர். ⁠1219

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்காணார்கொல் இவ்வூ ரவர். ⁠1220

Comments

Loading comments…