காதல் சிறப்பு உரைத்தல்

திருக்குறள், மூலம்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர். ⁠1121

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்னமடந்தையொடு எம்மிடை நட்பு. ⁠1122

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற்கு இல்லை இடம். ⁠1123

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்அதற்கன்னள் நீங்கும் இடத்து. ⁠1124

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம். ⁠1125

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவராநுண்ணியர்எம் காத லவர். ⁠1126

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்எழுதேம் கரப்பாக்கு அறிந்து. ⁠1127

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்அஞ்சுதும் வேபாக் கறிந்து. ⁠1128

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கேஏதிலர் என்னும்இவ் வூர். ⁠1129

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்ஏதிலர் என்னும்இவ் வூர். ⁠1130

Comments

Loading comments…