காலம் அறிதல்

திருக்குறள், மூலம்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. ⁠481

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்தீராமை ஆர்க்குங் கயிறு. ⁠482

அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின். ⁠483

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்கருதி இடத்தாற் செயின். ⁠484

காலம் கருதி இருப்பர் கலங்காதுஞாலம் கருது பவர். ⁠485

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து. ⁠486

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்துஉள்வேர்ப்பர் ஒள்ளி யவர். ⁠487

செறுநரைக் காணின் சுமக்க இறுவரைகாணின் கிழக்காம் தலை. ⁠488

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற் கரிய செயல். ⁠489

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த இடத்து. ⁠490

Comments

Loading comments…