குடி செயல் வகை

திருக்குறள், மூலம்

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல். ⁠1021

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி. ⁠1022

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும். ⁠1023

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு. ⁠1024

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு. ⁠1025

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல். ⁠1026

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை. ⁠1027

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும். ⁠1028

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு. ⁠1029

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடி. ⁠1030

Comments

Loading comments…