குறிப்பு அறிதல்

திருக்குறள், மூலம்

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி. ⁠701

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல். ⁠702

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்தும் கொளல். ⁠703

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு. ⁠704

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண். ⁠705

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம். ⁠706

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும். ⁠707

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின். ⁠708

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின். ⁠709

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்லது இல்லை பிற. ⁠710

Comments

Loading comments…