சான்றாண்மை

திருக்குறள், மூலம்

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. ⁠981

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்எந்நலத்து உள்ளதூஉம் அன்று. ⁠982

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடுஐந்துசால் ஊன்றிய தூண். ⁠983

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு. ⁠984

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்மாற்றாரை மாற்றும் படை. ⁠985

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல். ⁠986

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு. ⁠987

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். ⁠988

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்குஆழி எனப்படு வார். ⁠989

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை. ⁠990

Comments

Loading comments…