சிற்றினம் சேராமை

திருக்குறள், மூலம்

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்சுற்றமாச் சூழ்ந்து விடும். ⁠451

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்குஇனத்தியல்ப தாகும் அறிவு. ⁠452

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்இன்னான் எனப்படுஞ் சொல். ⁠453

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்குஇனத்துள தாகும் அறிவு. ⁠454

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்இனந்தூய்மை தூவா வரும். ⁠455

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்குஇல்லைநன் றாகா வினை. ⁠456

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்எல்லாப் புகழும் தரும். ⁠457

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப் புடைத்து. ⁠458

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்இனநலத்தின் ஏமாப் புடைத்து. ⁠459

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். ⁠460

Comments

Loading comments…