சுற்றம் தழால்

திருக்குறள், மூலம்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்சுற்றத்தார் கண்ணே உள. ⁠521

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவும் தரும். ⁠522

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று. ⁠523

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்பெற்றத்தால் பெற்ற பயன். ⁠524

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். ⁠525

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல். ⁠526

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்அன்னநீ ரார்க்கே உள. ⁠527

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்அதுநோக்கி வாழ்வார் பலர். ⁠528

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்காரணம் இன்றி வரும். ⁠529

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்இழைத்திருந்து எண்ணிக் கொளல். ⁠530

Comments

Loading comments…