சூது

திருக்குறள், மூலம்

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. ⁠931

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. ⁠932

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும். ⁠933

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல். ⁠934

கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார். ⁠935

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார். ⁠936

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின். ⁠937

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது. ⁠938

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின். ⁠939

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர். ⁠940

Comments

Loading comments…