செங்கோன்மை

திருக்குறள், மூலம்

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை. ⁠541

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழுங் குடி. ⁠542

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். ⁠543

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு. ⁠544

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்டபெயலும் விளையுளும் தொக்கு. ⁠545

வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின். ⁠546

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின். ⁠547

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும். ⁠548

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில். ⁠549

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். ⁠550

Comments

Loading comments…