செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள், மூலம்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. ⁠101

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்ஞாலத்தின் மாணப் பெரிது. ⁠102

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது. ⁠103

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். ⁠104

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து. ⁠105

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு. ⁠106

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு. ⁠107

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லதுஅன்றே மறப்பது நன்று. ⁠108

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும். ⁠109

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்ற மகற்கு. ⁠110

Comments

Loading comments…