தகையணங்கு உறுத்தல்

திருக்குறள், மூலம்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும்என் நெஞ்சு. ⁠1081

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து. ⁠1082

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு. ⁠1083

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக்கு அமர்த்தன கண். ⁠1084

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து. ⁠1085

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்இவள் கண். ⁠1086

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில். ⁠1087

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்நண்ணாரும் உட்குமென் பீடு. ⁠1088

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குஅணியெவனோ ஏதில தந்து. ⁠1089

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று. ⁠1090

Comments

Loading comments…