தனிப்படர் மிகுதி

திருக்குறள், மூலம்

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனி. ⁠1191

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி. ⁠1192

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமேவாழுநம் என்னும் செருக்கு. ⁠1193

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின். ⁠1194

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை. ⁠1195

ஒருதலையான் இன்னாது காமம்காப் போலஇருதலை யானும் இனிது. ⁠1196

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான். ⁠1197

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்துவாழ்வாரின் வன்கணார் இல். ⁠1198

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுஇசையும் இனிய செவிக்கு. ⁠1199

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு. ⁠1200

Comments

Loading comments…