தீவினை அச்சம்

திருக்குறள், மூலம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு. ⁠201

தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும். ⁠202

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல். ⁠203

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. ⁠204

இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து. ⁠205

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான். ⁠206

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும். ⁠207

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று. ⁠208

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால். ⁠209

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின். ⁠210

Comments

Loading comments…