தெரிந்து தெளிதல்

திருக்குறள், மூலம்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும். ⁠501

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு. ⁠502

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு. ⁠503

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல். ⁠504

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். ⁠505

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி. ⁠506

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும். ⁠507

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும். ⁠508

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள். ⁠509

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும். ⁠510

Comments

Loading comments…