தெரிந்து வினையாடல்

திருக்குறள், மூலம்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும். ⁠511

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை. ⁠512

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு. ⁠513

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர். ⁠514

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. ⁠515

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல். ⁠516

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல். ⁠517

வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல். ⁠518

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு. ⁠519

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு. ⁠520

Comments

Loading comments…