நட்பு ஆராய்தல்

திருக்குறள், மூலம்

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு. ⁠791

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும். ⁠792

குணமும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு. ⁠793

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. ⁠794

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறியவல்லார்நட்பு ஆய்ந்து கொளல். ⁠795

கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல். ⁠796

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல். ⁠797

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. ⁠798

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும். ⁠799

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்ஒருவுக ஒப்பிலார் நட்பு. ⁠800

Comments

Loading comments…