நலம் புனைந்து உரைத்தல்

திருக்குறள், மூலம்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள். ⁠1111

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்பலர்காணும் பூவொக்கும் என்று. ⁠1112

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. ⁠1113

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்மாணிழை கண்ணொவ்வேம் என்று. ⁠1114

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குநல்ல படாஅ பறை. ⁠1115

மதியும் மடந்தை முகனும் அறியாபதியின் கலங்கிய மீன். ⁠1116

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போலமறுவுண்டோ மாதர் முகத்து. ⁠1117

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி. ⁠1118

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்பலர்காணத் தோன்றல் மதி. ⁠1119

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம். ⁠1120

Comments

Loading comments…