நாடு
திருக்குறள், மூலம்
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும் சேர்வது நாடு. 731
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு. 732
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்குஇறையொருங்கு நேர்வது நாடு. 733
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு. 734
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு. 735
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை. 736
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 737
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து. 738
நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு. 739
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு. 740
Comments
Loading comments…