நாண் உடைமை

திருக்குறள், மூலம்

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்நல்லவர் நாணுப் பிற. ⁠1011

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு. ⁠1012

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு. ⁠1013

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்பிணிஅன்றோ பீடு நடை. ⁠1014

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு. ⁠1015

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர். ⁠1016

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர். ⁠1017

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்அறம்நாணத் தக்கது உடைத்து. ⁠1018

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை. ⁠1019

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி யற்று. ⁠1020

Comments

Loading comments…