நானுத் துறவு உரைத்தல்

திருக்குறள், மூலம்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி. ⁠1131

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து. ⁠1132

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல். ⁠1133

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுநல்லாண்மை என்னும் புணை. ⁠1134

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர். ⁠1135

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடல்ஒல்லா பேதைக்கென் கண். ⁠1136

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணின் பெருந்தக்க தில். ⁠1137

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும். ⁠1138

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்மறுகின் மறுகும் மருண்டு. ⁠1139

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு. ⁠1140

Comments

Loading comments…