நினைந்தவர் புலம்பல்

திருக்குறள், மூலம்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது. ⁠1201

எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்நினைப்ப வருவதொன்று இல். ⁠1202

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்சினைப்பது போன்று கெடும். ⁠1203

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்துஓஒ உளரே அவர். ⁠1204

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்எம்நெஞ்சத்து ஓவா வரல். ⁠1205

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்உற்றநாள் உள்ள உளேன். ⁠1206

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்உள்ளினும் உள்ளம் சுடும். ⁠1207

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு. ⁠1208

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து. ⁠1209

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்படாஅதி வாழி மதி. ⁠1210

Comments

Loading comments…