நிறை அழிதல்

திருக்குறள், மூலம்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு. ⁠1251

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில். ⁠1252

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும். ⁠1253

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்மறையிறந்து மன்று படும். ⁠1254

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்உற்றார் அறிவதொன்று அன்று. ⁠1255

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோஎற்றென்னை உற்ற துயர். ⁠1256

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின். ⁠1257

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படை. ⁠1258

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்கலத்தல் உறுவது கண்டு. ⁠1259

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல். ⁠1260

Comments

Loading comments…