நெஞ்சொடு கிளத்தல்

திருக்குறள், மூலம்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கும் மருந்து. ⁠1241

காதல் அவரிலர் ஆகநீ நோவதுபேதைமை வாழியென் நெஞ்சு. ⁠1242

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல். ⁠1243

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்று. ⁠1244

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர். ⁠1245

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. ⁠1246

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேன்இவ் விரண்டு. ⁠1247

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. ⁠1248

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு. ⁠1249

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமாஇன்னும் இழத்தும் கவின். ⁠1250

Comments

Loading comments…