பகைத் திறம் தெளிதல்

திருக்குறள், மூலம்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்நகையேயும் வேண்டற்பாற்று அன்று. ⁠871

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லேர் உழவர் பகை. ⁠872

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்பல்லார் பகைகொள் பவன். ⁠873

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்தகைமைக்கண் தங்கிற்று உலகு. ⁠874

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. ⁠875

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்தேறான் பகாஅன் விடல். ⁠876

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்கமென்மை பகைவர் அகத்து. ⁠877

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்பகைவர்கண் பட்ட செருக்கு. ⁠878

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்கைகொல்லும் காழ்த்த இடத்து. ⁠879

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்செம்மல் சிதைக்கலா தார். ⁠880

Comments

Loading comments…