பகை மாட்சி

திருக்குறள், மூலம்

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை. ⁠861

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு. ⁠862

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு. ⁠863

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது. ⁠864

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க்கு இனிது. ⁠865

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும். ⁠866

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை. ⁠867

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்குஇனனிலனாம் ஏமாப் புடைத்து. ⁠868

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின். ⁠869

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி. ⁠870

Comments

Loading comments…