பசப்புறு பருவரல்

திருக்குறள், மூலம்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க்கு உரைக்கோ பிற. ⁠1181

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்பு. ⁠1182

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறாநோயும் பசலையும் தந்து. ⁠1183

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்கள்ளம் பிறவோ பசப்பு. ⁠1184

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்மேனி பசப்பூர் வது. ⁠1185

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. ⁠1186

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்அள்ளிக்கொள் வற்றே பசப்பு. ⁠1187

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்துறந்தார் அவர்என்பார் இல். ⁠1188

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்நன்னிலையர் ஆவர் எனின். ⁠1189

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின். ⁠1190

Comments

Loading comments…