படர் மெலிந்து இரங்கல்

திருக்குறள், மூலம்

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும். ⁠1161

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குஉரைத்தலும் நாணுத் தரும். ⁠1162

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்நோனா உடம்பின் அகத்து. ⁠1163

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல். ⁠1164

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர். ⁠1165

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது. ⁠1166

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன். ⁠1167

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்லது இல்லை துணை. ⁠1168

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா. ⁠1169

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோஎன் கண். ⁠1170

Comments

Loading comments…